இன்று உலகம் முழுவதும் சர்வதேச டீ தினம் தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் ஊழியர்களை போற்றும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று உலகில் டீ தினம் கடைபிடிக்கப்படுகிறது. தேயிலையின் நிலையான உற்பத்தி மற்றும் தேயிலை பயன்பாட்டுக்கு ஆதரவான நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான கூட்டு நடவடிக்கையை வளர்க்கவும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை உணர்த்தவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு பன்னாட்டு மாநாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
உலகின் பல்வேறு பகுதிகளில் தேயிலை பயிர் செய்யப்பட்டாலும், சீனா, இந்தியா, இலங்கை, ஜப்பான் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளில் தான் அதிகம் விளைகிறது. தேயிலையின் பிறப்பிடம் சீனா, ஒயிட், கிரீன், ஓலாங், பிளாக் மற்றும் புவெர் என்ற ஐந்து தேநீர் வகைகள் உள்ளன. ஒரே மாதிரியாக தேயிலை விளைவிக்கபட்டாலும், அதனை பதப்படுத்துவது பொருத்து மேற்கூறிய வகைகளில் பிரிக்கப்படுகின்றன. இந்த ஐந்து பிரிவுகளில் பல வகையான ப்ளேவர்களில் தேநீர் தயாரிக்கப்படுகிறது.