Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அனைத்து இடத்திலும் கொண்டாட்டம்… நடைபெற்ற யோகா போட்டி… மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு…!!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவ – மாணவியர்களுக்கு யோகா போட்டி நடத்தப்பட்டது.

அனைத்து இடங்களிலும் ஜுன் 21 – ஆம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் யோகாசனங்கள் செய்தால் மனதளவிலும், உடல்நிலையிலும் ஆரோக்கியம் பெறலாம் என்பதை வலியுறுத்தி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் யோகா போட்டி நடைபெற்றுள்ளது.

இந்த போட்டியில் யோகாசன சங்கத்தின் தலைவரான எஸ். எஸ். எஸ்.நாதன் முன்னிலையில் மாணவ – மாணவிகள் பலர் பங்கேற்றனர். மேலும் விவேகா அறக்கட்டளை அமல்தாமஸ் மற்றும் செயலாளரான அழகேசராஜா போன்றோர் உடன் இருந்துள்ளனர். அதன் பிறகு மாலை நேரத்தில் போட்டியில் பங்கேற்ற மாணவ – மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |