இந்த பதிவில் நாம் இன்டர்நெட் பற்றிய சில சுவாரசியமான தகவல்களை பார்க்க போகிறோம். ஒரு தரமிக்க search tool என்றால் google தான். ஒரு நாளில் கூகுளில் மட்டும் சராசரியாக 5 மில்லியன் searches வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.
அதேபோல் இன்டர்நெட் என்பது உலகம் முழுவதும் சாட்டிலைட் மூலம் நமக்கு கிடைக்கிறது என்று நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இன்டர்நெட் என்பது உலகம் முழுவதும் கேபிள் வழியாகத்தான் இணைக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தில் இன்டர்நெட்டை ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்கு கேபிள் வழியாக இணைத்திருப்பார்கள். இப்படிதான் உலகம் முழுவதும் இன்டர்நெட் சேவையை கிடைக்கும் படி செய்கிறார்கள். இன்டர்நெட் கேபிள்களை நேராக வைத்தோமானால் உலகத்தை 22 முறை சுற்ற முடியுமாம். அந்த அளவிற்கு இந்த இன்டர்நெட் கேபிள் பெரியதாகும்.
இதனையடுத்து உலகம் முழுவதிலும் இன்டர்நெட் அதிவேகமாக சிங்கப்பூர் நாட்டில் தான் கிடைக்குமாம். மேலும் முதல் முதலில் தென்கொரியா நாட்டில்தான் 5ஜி நெட்வொர்க் வந்துள்ளதாம். குறிப்பாக இன்டர்நெட் பயனாளர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக பத்து மணி நேரம் ஆன்லைனில் செலவு செய்கிறார்களாம்.