Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட டாக்டர்கள் மற்றும் நர்சுகள்…. புதிதாக நேர்முகத்தேர்வு நடத்திய அரசு மருத்துவமனை…. 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு….!!

நெல்லை அரசு மருத்துவமனையில் மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் அரசு மருத்துவமனையில் புதிதாக மருத்துவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவர்களும், செவிலியர்களும் சிகிச்சை அளிக்கும் போது அவர்களும் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலவிதமான சிகிச்சைகளை அளிப்பதற்கு புதிதாக மருத்துவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இந்த பணிக்கான நேர்முகத் தேர்வு மருத்துவமனையினுடைய கூட்ட அரங்கில் நடைபெற்றுள்ளது. இதில் சுமார் 100 க்கும் மேலான டாக்டர்கள் வந்திருந்தனர். அவர்களுடைய சான்றிதழ்கள் அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டது. இவர்களுடைய பட்டியல் விரைவாக சேகரிக்கப்பட்டு தேவைப்படுகின்ற மருத்துவர்கள் பணியில் நியமிக்கப்படுவார்கள்.

Categories

Tech |