பிரியாணி மீதுள்ள ஆர்வத்தால் அஜித்தும் நானும் நன்பர்கள் ஆகிவிட்டோம் என்று ஹாலிவுட் நடிகை கல்கி கொய்சிலி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முடி சூடா மன்னனாக திகழ்பவர் தல அஜித்.இவர் படங்கள் ரீலிஸ் என்றோ அன்று தான் இவரது ரசிகர்களுக்கு தீபாவளி, பொங்கல் எல்லாம்.எந்த பின்புலமும் இல்லாமல் தானாக உயர்ந்து இன்று தலையாக தமிழக ரசிகர்களின் இதயத்தில் இருப்பவர் அஜித் குமார். சுயநலத்தை பார்க்காமல் ரசிகர்களுக்காக அவர்களின் நலம் கருதி ரசிகர் மன்றத்தை கலைத்தவர் தல.
தற்பொழுது தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்,அந்த படத்தின் 2வது பாடல் அண்மையில் வெளியாகியது.அந்த பாடலில் ஹாலிவுட் நடிகை கல்கி கொய்சிலின் நடித்துள்ளார்.அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தல அஜித் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.அதில் அவர் கூறியதாவது, அஜித் மிகவும் பண்பானவர்,நான் வணக்கம் சொல்வதற்கு முன்பே அவர் எனக்கு வணக்கம் சொல்வார்.மேலும் நானும் அவரும் பிரியாணி மீது உள்ள ஆர்வத்தினால் நண்பர்கள் ஆகிவிட்டோம் என்று கூறியுள்ளார்.