பல்வேறு தடைகளை தாண்டி நடைபெறும் இந்த வாக்குபதிவில் 80 சதவீத வாக்கு பதிவாகும் என்று நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் ஏராளமான நடிகர் , நடிககைகள் மற்றும் திரைகலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர்.
காலை 7 மணி முதல் களைகட்டிய விறுவிறுப்பாக வாக்குபதிவில் இதுவரை 198 நடிகர் , நடிகைகள் வாக்களித்துள்ளனர். இந்நிலையில் , வாக்களித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் குஷ்பூ பேசுகையில் , பல தடைகளுக்கு பிறகு தேர்தல் நடைபெறுகிறது உண்மை நியாயம் வெல்லும் நடிகர் சங்கத் தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாகும் என்று தெரிவித்துள்ளார்.