Categories
அரசியல்

அதிமுக வேட்பாளர்களிடம் இன்று நேர்காணல்……!!

அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் தொடங்குகின்றது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 7 தொகுதிகளும் , பாஜகவுக்கு 5 தொகுதிகளும்,  தேமுதிகவிற்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது . மேலும்  புதிய நீதி கட்சி , புதிய தமிழகம் மற்றும் புதுச்சேரி_யில்  என் ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளும் அதிமுகவும் எந்தெந்த கட்சிகள்  தொகுதிகளில் போட்டியிடும் என்பதை விரைவில் கலந்து ஆலோசித்து அறிவிக்க உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார் .

இதனிடையே அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்து அவர்களிடம் கட்சித் தலைமையகத்தில் இன்றும் , நாளையும் நேர்காணல் நேர்காணல் நடைபெறுகிறது . இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் நேர்காணலில் காலை 10 தொகுதிகளுக்கும் , மாலையில் 10 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது .

Categories

Tech |