Categories
அரசியல்

“எனக்கும் முதலமைச்சராக ஆசை தான்” அதிமுக அமைச்சர் பகிர் பேட்டி…!!

தமிழ்நாடு முதலமைச்சர் ஆக வேண்டுமென தனக்கும் ஆசை இருப்பதாக  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும், அதிமுகவின் முக்கிய பரமுகருமான   ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும்  கனமழையால் வேளாங்கண்ணி, பகுதியை சுற்றிலும் வெள்ளநீர் வீடுகளை சூழ்ந்து காணப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில்  சென்று பார்வையிட்டார். பின் அவருடன் வந்த அதிமுக தொண்டர்கள் தேங்கி இருந்த தண்ணீரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய அமைச்சர் ஓ.எஸ். மணியன்,

வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தான்  அமோக வெற்றிபெறும் என்று தெரிவித்தார். பின் ஸ்டாலின் தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சரென பாஜக நிர்வாகி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார், நான் கூட முதலமைச்சர் ஆக ஆசைப்படுகிறேன்.

ஆனால், அதெல்லாம் நடக்குமா? அதற்கு உழைப்பு வேண்டும்  என்றார். மேலும் அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுகவின் கொள்கையை தூக்கி வீசி விட்டு, இந்துத்துவத்தின் கொள்கையை உயர்த்திப் பிடிக்கின்ற மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்தாக்கரேவைச் நேரில் சந்தித்து மாலை அணிவித்த ஸ்டாலின், மதச்சார்பற்ற திமுக கட்சிக்கு தலைவரா இருக்கலாமா? என்று கேள்வி எழுப்பினார்.

Categories

Tech |