Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 2ஆவது நபருக்கு கொரோனா – அமைச்சர் பேட்டி …!!

தமிழகத்தில் இரண்டாவதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2ஆவதாக ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்து உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ,  சென்னையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.டெல்லியில் இருந்து சென்னை வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா தொடர்பாக 1,89,750 பேர் கண்காணிக்கப்பட்டுள்ளனர். 222 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 166 பேருக்கு கொரோனா இல்லை என உறுதியாகிவிட்டது. வெளிநாடு , வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளை கூடுதலாக கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பதற்றம் வேண்டாம் , அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றது. ஏற்கனவே காஞ்சிபுரத்தை சார்ந்த ஒருவர் கொரோனா தொற்று சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |