புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது அரவேக்காடு தனமாக உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சனம் செய்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பலரும் இதற்கு பாராட்டுக்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா மற்றும் பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டுவதாக உள்ளது என்றும், அவர் நடிக்கும் படத்திற்கு விளம்பரம் தேடுகிறார் என்றும் குற்றம் சாட்டினர்.
இவரைத் தொடர்ந்து தற்போது அமைச்சர் கடம்பூர் ராஜு இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், புதிய கல்விக் கொள்கை திட்டத்தைப் பற்றி சூர்யாவிற்கு என்ன தெரியும் என்றும் , எந்த ஒரு திட்டம் ஆனாலும் அது செயல்படுத்தப்பட்ட பின்பே அது மக்களுக்கு நல்லதா? இல்லை கெட்டதா? என்று ஆராய முடியுமென தெரிவித்த அவர்,திட்டத்தை முழுதாக அறிந்து கொள்ளாமல் அதைப் பற்றி குறை கூறுவது எந்த விதத்திலும் நியாயமில்லை என்றும் தெரிவித்தார். மேலும் நடிகர் சூர்யாவின் இத்தகைய பேச்சு அரவேக்காடு தனமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.