மத்திய அமைச்சரவையில் அதிமுகவை சேர்ந்த 2 பேர் இடம்பெற்ற வாய்ப்புள்ளதாக அமைச்சர் பாண்டியராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் , ஆளுநர்கள் பங்கேற்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி கட்சி அதிமுக என்பதால் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரும் டெல்லி சென்றனர். அதிமுக_விற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட சுழலில் அதிமுக_விற்கு இடமில்லாமலே அமைச்சரவை பொறுப்பேற்றது.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியின் பாஜக இடம்பெற்று தேனி மக்களவை தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றுள்ள சூழலில் அங்கு வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி கிடைக்காததையடுத்து அதிமுக தலைமை கடுப்பாகி உள்ளது.
இதுகுறித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில் , அடுத்தக்கட்ட மத்திய அமைச்சரவை பட்டியலில் தமிழகத்திற்கு நிச்சயம் இடம் இருக்கும். தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமை, பிரதிநிதித்துவம் உறுதியாக கிடைக்கும். அதிமுகவை சேர்ந்த 2 பேர் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.