எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை என்று 24 மணி நேரத்திற்கு பின் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம்பேட்டியளித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தேடி வரும் நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில் , சுதந்திரத்தை பெறவும் போராடினோம் , சுதந்திரத்தை காக்கவும் போராடி வருகின்றோம். என் மீது குற்றச்சாட்டு இல்லை.நான் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டவில்லை வழக்கில்.என் மீது சிபிஐ அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.
தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.ஐஎன்எக்ஸ் வழக்கில் என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை.7 மாதங்களுக்கு பின் என்னுடைய முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம் என்று தெரிவித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவரின் வழக்கறிஞ்சர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித் உள்ளிடோர் இருந்தனர்.