அத்திவரதர் மேலே இருந்தால் தான் மழை பொலிந்து நாடு செழிப்பாக இருக்குமென ஸ்ரீவில்லிபுத்தூர் ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அத்திவரதர் உற்சவத்தில் 40 நாட்கள் மட்டுமே தரிசனம் நடைபெறும். அதன் பின் மீண்டும் குலத்திற்கு அடியில் அத்திவரதர் புதைக்கப்படுவார் என்று கூறப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தில் ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் இது குறித்து செய்தியாளர்களிடையே பேசுகையில், கடந்த காலங்களில் திருட்டு பயத்தினால்தான் அத்திவரதரை பூமிக்கடியில் புதைத்ததாகவும், 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வந்துள்ள அத்திவரதரை இனிப் புதைக்க தேவை இல்லை என்றும் கூறினார்.
மேலும் இதுதொடர்பாக முதலமைச்சர் மற்றும் காஞ்சிபுர சிறப்பு அர்ச்சகர்களை சந்தித்து அனைத்து மடாதிபதிகளும் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்த ஜீயர், அத்திவரதர் மேலே வந்ததால்தான் மழை பொழிவதாகவும் , நாடும் மக்களும் நன்றாக இருக்க வேண்டுமெனில் அத்திவாரத்தார் புதைக்கப்படமால் மேலே இருக்க வேண்டும் என கூறினார்.