தமிழகத்தையும் யூனியன் பிரதேஷமாக மாற்றுவார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இந்தியா வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்ட பிரிவை மத்திய அரசு இரத்து செய்து கடந்த 5_ஆம் தேதி அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து உத்தரவிட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவும் , எதிர்ப்பும் தெரிவித்தனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்தில் அதிமுக ஆதரவு தெரிவித்தது.
அதே போல திமுக , காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் பலவும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில் , காஷ்மீரை போல தமிழகத்தையும் வட தமிழகம், தென் தமிழகம் என 2ஆக பிரிப்பார்கள். சென்னையை புதுச்சேரி போல யூனியன் பிரதேசமாக மாற்றுவார்கள் என்று விமர்சித்துள்ளார்.