தமிழில் எவ்வளவு தான் சிறந்த படம் எடுத்தாலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தேசிய விருது கிடைக்காது என பாடலாசிரியர் யுகபாரதி தெரிவித்துள்ளார்.
தேசிய விருதுக்கான தமிழ் திரைப்படங்களில் வடச்சென்னை, பேரன்பு, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டன. ஆனால் பரிந்துரை செய்யப்பட்ட எந்த தமிழ் படமும் தேசிய விருதுக்கு தேர்வாகவில்லை. இது தமிழ் திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் எதிர் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.
இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த கன்னி ராசி படக்குழுவின் செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய பாடலாசிரியர் யுகபாரதி, தமிழ் திரையுலகை காக்க ஆசைப்படும் பெரிய நடிகர்கள் கிருஷ்ணன் அர்ஜுன்ரெட்டி பற்றி பேசக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். தமிழில் எவ்வளவு தான் சிறந்த படம் எடுத்தாலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தேசிய விருது கிடைக்காது என்று குறிப்பிட்ட அவர், முன்னணி நடிகர்கள் தமிழ் திரைப் படங்களுக்கு தேசிய விருது புறக்கணிக்கப்படுவது குறித்து பேச முன்வரவேண்டும் என்றும் யுகபாரதி தெரிவித்தார்.