ஸ்டாலினுக்கு அய்யாதுரை என்று பெயர் வைத்ததாக அதிமுக MLA இன்பதுரை தெரிவித்தார்.
ராதாபுரம் சட்டமன்ற தொகுதி MLA இன்பதுரை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , திமுக வேட்பாளர் அப்பாவுக்கு விழுந்த 201 தபால் வாக்குகளில் முறையாக சான்றுகள் இல்லை எனவே குறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்த பிறகு ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வாக்கு முடிவுகளை எண்ணிக் கொள்ளலாம் என்பதே எங்களின் வாதம். ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவு தெரிந்து விட்டது இதனால் இன்பதுரை துன்பதுரையாக மாறி விட்டார் என்று ஸ்டாலின் தெரிவித்ததை குறிப்பிட்ட இன்பதுரை ,எங்க அப்பா எனக்கு
தமிழ்ல பெயர் வச்சு இருக்காங்க இன்பதுரை என்று , ஸ்டாலினுக்கு அவருடைய தந்தையாரும் அவருக்கு முதலில் ஒரு பெயர் வைத்தார் அய்யாதுரை. அய்யாதுரை தான் அவருக்கு வைத்த முதல் பெயர். பின்னர் தான் ஸ்டாலின் என்று பெயர் வச்சுருக்காங்க என்று இன்பதுரை தெரிவித்தார். ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கு எதிரான வழக்கு நவம்பர் மாதம் வருகின்றது அந்த வழக்கில் அய்ய்யாதுரை ஸ்டாலின் ஐயோ..! துரையாக மாறுவார். ராதாபுரம் மறு வாக்கு எண்ணிக்கை வழக்கின் முடிவில் இன்பதுரையாகிய நான் பேரின்ப துரையாக மாறுவேன் என்று அதிமுக ராதாபுரம் MLA இன்பதுரை தெரிவித்தார்.