தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாரதி நகரில் ஞானதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஞானதுரை தனியார் லேமினேஷன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரின் மனைவி முனீஸ்வரி ரேஷன் கடையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஞான துரைக்கு குடல்வால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்காக ஞானதுரை பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் நோய் குணமடையவில்லை.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஞானதுரை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஞான துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.