Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்த 2 பேர் தான் எங்க டீம்முக்கும் டேஞ்சர் “….! தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் ஏல்கர் ஓபன் டாக் ….!!!

இந்திய அணியில் முகமது ஷமி, பும்ரா இருவரும் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது . இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது .அதோடு செஞ்சூரியனில்  வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது .இதில் குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்தது . தென்னாப்பிரிக்காவில் 20 விக்கெட்டுகளில் 18 விக்கெட்டுகள் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் எடுத்துள்ளனர். இதில் குறிப்பாக முகமது ஷமி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட் என்ற புதிய மைல்கல்லை எட்டினார் .

அதன் பிறகு 2-வது இன்னிங்சிலும் 3 விக்கெட் கைப்பற்றி வெற்றிக்கு காரணமாக இருந்தார். இந்நிலையில் இதுகுறித்து தென்னாபிரிக்கா டெஸ்ட் அணியின் கேப்டன் டீன் எல்கர் கூறும்போது,” இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தென்ஆப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார்கள் .குறிப்பாக இந்திய அணியில் முகமது ஷமி,  பும்ரா இருவரும் தென்னாபிரிக்கா பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் .இப்போதுள்ள நிலையில் இந்திய அணிக்கு சரிவிகிதமாக பந்துவீச்சாளர்கள் கிடைத்துள்ளன. அதோடு முகமது ஷமி பந்துவீச்சில்வேரியேஷன் இருக்கின்றது . இதில் சில பந்துகள் எதிர்த்து விளையாட கடினமாக உள்ளது .இதனால் பும்ரா, முகமது ஷமி இருவரும் தான் எங்கள் அணி பேட்ஸ்மேன்களுக்கு தொந்தரவாகவும் ,அச்சுறுத்தலாகவும் இருப்பார்கள் ” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |