Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இந்த ஆடு எப்படி வந்துச்சு… வசமாக சிக்கிய வாலிபர்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஆடு திருடிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சுரண்டை பகுதியில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றி வருகின்றனரா என்பதை கண்காணிப்பதற்காக காவல் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் படியாக இருவர் மோட்டார் சைக்கிளில் ஆட்டை ஏற்றிக் கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த மோட்டார் சைக்கிளில் ஆடு இருந்ததைக் கண்டு அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் கம்பளி பகுதியில் வசிக்கும் சந்திரன் மற்றும் மணிக்குமார் என்பதும் தெரியவந்துள்ளது.மேலும் அவர்கள் இருவரும் இணைந்து அந்த ஆட்டினை திருடி விட்டு வேகமாக சென்றதும்  காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின் ஆடு திருடிய  குற்றத்திற்காக காவல்துறையினர் 2 பேரின் மீது வழக்குப் பதிவு செய்ததோடு இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |