இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் வெளிநாட்டவர்கள் உட்பட 10 லட்சம் யாத்ரீகர்கள் அனுமதிக்க உள்ளதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது.
ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களை சவுதி அரேபிய அரசு இந்த ஆண்டு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் உட்பட 10 லட்சம் யாத்ரீகர்களை அனுமதிக்க தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் கூறியதாவது. “யாத்ரீகர்கள் 65 வயதிற்க்கு கீழ் உள்ளவர்களாகவும், கொரோனா வைரஸ்கான 2 டேஸ் தடுப்பூசி அவசியம். மேலும் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் ஆர்.டி. பி. சி. ஆர் நெகட்டிவ் சான்றிதழையும் கண்டிபாக காண்பிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து உடல் ஆரோக்கியத்திற்காக அவர்கள் எடுத்துக்கொள்ளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் காண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.