Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்த கேப்டன்ஷிப் முடிவு சரியானது தான்’ ….! ஆதரவு தெரிவித்த ரவி சாஸ்திரி….!!!

இந்திய அணியின் கேப்டன்ஷிப் பிரிப்புக்கு முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டன்சிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் கேப்டன்சி  விவகாரத்தில் பிசிசிஐ மற்றும் விராட் கோலி மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது .இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி பேட்டி ஒன்றில் கூறும்போது,” இந்திய அணி கேப்டன்ஷிப் பிரித்து வழங்கப்பட்டிருப்பது சரியான முடிவுதான் என கருதுகிறேன். இதில் விராட் கோலி டெஸ்ட் அணிக்கும் ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 அணிக்கும் கிடைத்திருப்பது ஆசீர்வாதமாக நான் கருதுகிறேன். ஏனெனில் தற்போதுள்ள சூழலில் கொரோனா  தடுப்பு பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்து கொண்டு 3 வடிவிலான அணியும் ஒரே வீரர் கையாள்வது மிகவும் கடினமானதாகும். இதில் விராட் கோலி தனது முழு கவனத்தையும் டெஸ்ட் கிரிக்கெட் மீது செலுத்த முடியும் .

அதோடு அவர் விரும்பும் வரை டெஸ்ட் அணியை வழி நடத்தலாம். மேலும் அவர் 5-6 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவார் .இவர்கள் இருவரும் அணியை வழிநடத்தும் மிதம் எனக்கு கபில் தேவ் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோரின் கேப்டன்ஷிப்பை  நினைவூட்டுகிறது. விராட் கோலி கபில்தேவ் போன்று தன்னுடைய உணர்வுகளை களத்தில் வெளிப்படுத்துகிறார் .அதேபோல் ரோஹித் சர்மா கவாஸ்கர் போன்று களத்தில் பதட்டமின்றி பொறுமையாக செயல்படுகிறார். மேலும் ரோஹித் சர்மாவை ஒரு தொடக்க வீரராக அணியில் நிலைநிறுத்த வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன் .அதை செய்து காட்டியுள்ளேன். ஒரு பேட்ஸ்மேனாக அவருடைய திறமையை என்னால் வெளிக் கொண்டுவர முடியவில்லை என்றால் நான் பயிற்சியாளராக தோற்றதாக அர்த்தம் என நினைத்தேன். ஏனெனில் ரோஹித் சர்மாவிடம் நிறைய திறமைகள் உள்ளது ” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |