ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் உள்ள கழநீர்மங்களம் கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார்கள். இவரது மகன் சக்திவேல். இவர்களை அதே ஊரே சேர்ந்த கிராமத்தலைவர் கருப்பையா, கிராம பொருளாளர் அய்யாசாமி, இளைஞர் மன்ற சங்க தலைவர் மலை முருகன் நீலமேகம், முருகானந்தம், சுதந்திரராஜா, செந்தில் வேல் ஆகிய நபர்களின் தூண்டுதலின் பேரில் ஊரே விட்டு ஒதுக்கி வைத்து அவர்களிடம் பேசக்கூடாது என்று கிராமத்தில் கட்டுப்பாடு விரித்துள்ளனர். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னதாக கண்மாயில் உள்ள தண்ணீரை அதே பகுதியை சேர்ந்த நபர்கள் விலைக்கு விற்பனைசெய்ததாக கூறப்படுகிறது. இதனால் கழநீர்மங்கலம் கிராமத்தை சேர்ந்த கருப்பையா மகன் சக்திவேல் இளைஞர் சங்க செயலாளராக இருந்துள்ளார். அப்போது கண்மாய் தண்ணீரை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் விற்பனைக்கு அனுமதி இல்லை என்று கூறியுள்ளார். இதன் விளைவாக ஊர் கூட்டத்தில் சக்திவேலை அவமானப்படுத்தி, அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சக்திவேல் கூட்டத்தில் இருந்து வெளியேறி உள்ளார்.
அதன் படி தன்னை எதிர்த்து கேள்வி கேட்ட ஒரே காரணத்தினால் அந்த கிராமத்தை சேர்ந்த மலைமுருகன், கருப்பையா, அய்யாசாமி, நீலமேகம், முருகானந்தம், சுதந்திர ராஜா, செந்தில் வேல் கருப்பையா ஆகியவர்கள் சக்திவேல் குடும்பத்தை ஊரே விட்டு ஒதுக்கி வைத்ததோடு மட்டுமில்லாமல் அந்த குடும்பத்தில் நடக்கும் திருமணம், இறப்பு நிகழ்ச்சிகள் எவற்றிற்கும் யாரும் பங்கு கொள்ள கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த கிராமத்தில் நடைபெறும் திருவிழாவில் இவர்களை சேர்த்துக் கொள்ளாமல் ஊரில் வரி வாங்குவதோ கிடையாது. அதோடு மட்டுமில்லாமல் அங்குள்ள கண்மாயில் குளிக்க சென்றால் அவர்களை ஏளனமாக பார்ப்பது, அருவருக்கத்தக்க வகையில் பேசுவது, ஊரே விட்டு ஒதுக்கி வைத்த நபர்கள் எதற்காக இங்கு வருவீர்கள் என்று ஏளனமாக பேசியதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கருப்பையாவின் மகளுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து அங்குள்ள கோவிலில் சாமி கும்பிட சென்றபோது அதே பகுதியை சேர்ந்த நபர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த நபர்கள் எதற்காக கோவிலுக்கு வருகிறீர்கள் என்று கூறினார்.
அதன்பிறகு தகராறில் ஈடுபட்டு அவர்களை கண்மூடித்தனமாக தாக்கியதோடு மட்டுமில்லாமல் கருப்பையாவின் மகள் கற்பகவள்ளியின் கழுத்தில் கிடந்த ஆறு பவுன் தங்க நகைகளை முனியாண்டி மகன் முருகானந்தம் என்பவர் அபகரித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் கருப்பையாவின் ஆடு, மாடுகளை அதே கிராமத்தில் உள்ள வயல் காட்டிற்கு மேச்சலுக்கு கூட அனுமதிக்க மறுப்பதாகவும், இரண்டு நாட்களுக்கு முன்பாக கருப்பையாவிற்கு சொந்தமான ஆட்டினை அதே பகுதியை சேர்ந்த நபர்கள் ஆட்டின் காலை உடைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்கள் சிக்கல் காவல் நிலையத்தில் இருதரப்பை சேர்ந்த நபர்கள் மீது சிக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட நபர்கள் சிக்கல் காவல் நிலையத்தில் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக புகார் மனுவில் குறிப்பிட்டிருப்பதற்கு காவல்துறை அலசியப்படுத்தியதாக வேதனையுடன் கூறுகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.