உங்களுடன் பக்கபலமாக ஒருவர் இருந்து தேவையான உதவிகளை செய்வார்கள். நண்பர்கள் மூலம் புதிய வசதி வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த மந்த நிலை மாறும். புதிய ஆர்டர்களில் இருந்த தடைகள் விலகி செல்லும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும்.
முன்னேற்றமான சூழல் இருக்கும். மேற்கல்வி காணும் முயற்சியில் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழி வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் இளம் மஞ்சள் நிறம்
ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். மற்றவர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புது மனை கட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும். இன்று உங்களுடைய திறமையான பேச்சின் மூலம் காரிய வெற்றி ஏற்படும்.
எதிர்பார்த்த பணவரவு இருக்கும். பொறுப்புகள் கூடும். மனமகிழ்ச்சி ஏற்படும் படி சிறப்பான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியம் நல்லபடியாகவே இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் மனதிற்கு திருப்தியைக் கொடுக்கக் கூடிய விதத்தில் நடந்து முடியும். கடன் சுமை குறையும்.
இன்று மாணவர்களுக்கு எதிர்பாராத விதத்தில் நன்மைகள் ஏற்படும். கல்வியில் உங்களுடைய திறமை மேம்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும்.
அதுமட்டுமில்லை இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்கள் செய்யுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்
மிதுனம் ராசி அன்பர்களே, இன்று வரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை இன்று சந்திப்பீர்கள். வீட்டை விரிவுபடுத்தலாமா என்ற சிந்தனை மேலோங்கும். வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனையும் தோன்றும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்கு நீங்கள் இன்று முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
தொழில் வியாபாரத்தில் கடினமான முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்களில் திருப்தி ஏற்படும். கடன் தொல்லைகள் அனைத்துமே கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் தாமதமாகவே வந்து கிடைக்கும்.
புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பலன் ஏற்படும். மன மகிழ்வான சூழ்நிலையில் இருக்கும். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கடுமையாக உழைத்து தான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும்.
ஆசிரியர்களின் கவனித்து அதற்கு கவனத்திற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் ஆரஞ்சு நிறம்
கடகம் ராசி அன்பர்களே, இன்று முன்னேற்றம் கூடும் நாளாகத்தான் இருக்கும். பொருளாதார நலன் கருதி வெளியூர் பயணம் ஒன்றை மேற் கொள்வீர்கள். சுப விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றங்கள், இலாகா மாற்றங்கள் போன்றவை கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தலாம். இன்று எதிர்ப்புகள் ஓரளவு அகலும்.
எதையும் ஒரு முறைக்கு, பல முறை யோசித்து செய்யுங்கள். யாருக்காவது எந்த ஒரு உத்திரவாதம் தரும் பொழுது கவனமாக இருப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டியிருக்கும். கடுமையான முயற்சிக்குப் பின் வெற்றி வாய்ப்புகளை நீங்கள் பெற முடியும். இன்று கொடுக்கல் , வாங்கல்களில் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
அதை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள், ஆசிரியர்களிடம் ஏதேனும் சந்தேகம் இருப்பின், கேட்டு தெரிந்து கொள்ளுங்கள், ரொம்ப நல்லது. படித்த பாடத்தை எழுதி பார்ப்பது ரொம்ப, ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள்,அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: பிங்க் மற்றும் இளம் சிவப்பு நிறம்
சிம்மம் ராசி அன்பர்களே, இன்று அதிகாலையிலேயே அனுகூலம் தரும் நாளாகவே இருக்கும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதமாக நடந்து கொள்வார்கள். வெளிநாட்டு தொடர்பு நலம் பயக்கும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரலாம். இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் பொழுது கொஞ்சம் கவனமாக இருங்கள். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள்.
நண்பர்களின் ஆலோசனையை கேட்டு பயன் பெறுவது ரொம்ப நல்லது. பெரியோரிடம் ஆலோசனையை கேட்டு எந்த ஒரு விஷயங்களையும் மேற்கொள்ளுங்கள். இன்று முயற்சிகள் ஓரளவு வெற்றியை தரும். மன அமைதி உண்டாகும். தெய்வீக நம்பிக்கை கூடும். காதல் கைகூடும் நாளாகவே இன்றைய நாள் இருக்கும்.
இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித தடையும் இல்லை. எந்த பிரச்சனையும் இல்லை, நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்
கன்னி ராசி அன்பர்களே, இன்று சிக்கல்கள் விலகி, சிகரத்தைத் தொடும் நாளாகவே இருக்கும். சாமர்த்தியமாகப் பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். இன்று வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும்.
எதிர்பாராமல் ஏற்படும், குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவி கிடைக்கும். வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்களின் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். இன்று மனம் மகிழ்வாக இருக்கும். ஆலயம் சென்று வருவதற்காக சிறு தொகையை இன்று செலவிட நேரிடும்.
இன்று காதல் கைகூடும் நாளாகத்தான் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக தான் இருக்கும். அதுபோலவே மாணவர்களுக்கு இன்று கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கவலை வேண்டாம்.
இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்வது ரொம்ப சிறப்பு, அனைத்து காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்
துலாம் ராசி அன்பர்களே, இன்று அன்பு நண்பர்களின் ஆதரவு கிட்டும் நாளாகவே இருக்கும். இழுபறியான காரியங்களில் வெற்றி கிட்டும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று எதையும் ஒரு முறைக்கு ,பல முறை யோசித்து செய்யுங்கள், அது போதும். மற்றவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள்.
உங்கள் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் எந்த விஷயங்களிலும் ஆலோசனை செய்யாமல் காரியத்தில் ஈடுபட வேண்டாம். இன்று ஓரளவு தான் சகித்துக் கொண்டிருக்க வேண்டி இருக்கும். கூடுமானவரை பொறுமையாக இருங்கள். குழப்பம் தயவுசெய்து அடையாதீர்கள். எதையாவது சிந்தித்த வண்ணம் இன்று இருந்து கொண்டே இருப்பீர்கள்.
புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது ரொம்ப நல்லது. பண வரவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று முக்கியமாக பெரியோரின் ஆலோசனை உங்களை நல்வழிப்படுத்தும். இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கூடுதலாக உழையுங்கள். ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி நீங்கள் நடந்து கொள்வது ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்
விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று வாக்குவாதங்களை தவிர்த்து வளம் காண வேண்டிய நாளாகத்தான் இருக்கும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும் பொழுது யோசித்து கொடுங்கள், எந்த உத்திரவாதமும் கொடுக்காதீர்கள். தேவையான பண வசதி உங்களுக்கு இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய பொறுப்புகளும் அதனால் வருமானமும் இருக்கும். எதிர்ப்புகள் ஓரளவு அகலும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். பூமி மூலம் லாபம் ஏற்படும், சகோதரர் உங்களுக்கு நண்பனாக இருப்பார்கள். வாழ்க்கை துணைக்கு ஏற்ப வசதிகளை செய்து கொடுப்பீர்கள்.
இன்று வீட்டில் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். தேவையான பொருட்களை இன்று வாங்க கூடும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் பேச்சைக் கேட்டு நடந்து கொள்வது ரொம்ப சிறப்பை கொடுக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு எப்பொழுதுமே அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்
தனுசு ராசி அன்பர்களே, இன்று பொது வாழ்வில் புகழ் கூடும் நாளாகத்தான் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். ஆன்மிகப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். புதிய எண்ணங்கள் ஏற்படும், புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.
வீண் வாக்குவாதங்களை மட்டும் தயவு செய்து இன்று தவிர்த்துவிடுங்கள். எதிர்ப்புகள் இருக்காது, செல்வம் சேரும், மனம் நிம்மதியாக இருக்கும். காதலர்களுக்கு காதல் கைகூடும் நாளாகத்தான் இன்று இருக்கும். மாணவர்களுக்கும் இன்று பொன்னான நாளாகத்தான் இருக்கும். கல்வியில் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்தும் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் இளம் நீலம் நிறம்
மகரம் ராசி அன்பர்களே, இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும் நாளாகத்தான் இருக்கும். முன்னோர் சொத்துக்களில் லாபம் கிடைத்து மகிழ்வீர்கள். அந்நிய தேசத்திலிருந்து தகவல் அனுகூலம் கொடுக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் நன்மை கிட்டும். இன்று எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். எந்த காரியத்திலும் முடிவெடுக்கும் முன்பே தீர ஆலோசிப்பது ரொம்ப நல்லது.
குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பொருள் சேர்க்கை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் முழுமையாக கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்
கும்பம் ராசி அன்பர்களே, இன்று பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாளாகவே இருக்கும். நிச்சயத்த காரியங்கள், நிச்சயத்தை படியே நடைபெறும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் உங்களை தேடி வரக்கூடும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த லாபம் உங்களுக்கு கிடைக்கும்.
தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். புதிய நபர்கள் கூறும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் முடிவெடுக்கும் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். எந்த விஷயங்களிலும் நீங்கள் ரொம்ப கவனமாகவே இருக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் அல்லது புதிய பொறுப்புகள் வர கூடும்.
எந்த ஒரு விஷயத்தையும் கவனமாக இன்று அணுகி கொள்வது ரொம்ப நல்லது. உங்களது பணி திறமையால் மேலதிகாரிகள் திருப்தி அடையக் கூடும். இன்று எதிர்பார்த்த செயல் ஓரளவு திருப்தியை கொடுக்கும். இன்று வாகனத்தில் செல்லும் போது ரொம்ப பொறுமையாக செல்லவேண்டும். யாருக்கும் எந்தவித உத்தரவாதமும், வாக்குறுதிகளையும் தயவு செய்து கொடுக்க வேண்டாம், அதில் மட்டும் கவனம் கொள்ளுங்கள்.
யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். எந்த விஷயத்திலும் நீங்கள் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கும், பாடங்களை கஷ்டப்பட்டு படியுங்கள், படித்த பாடங்களை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,
ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு
மீனம் ராசி அன்பர்களே, இன்று உயர் அதிகாரிகளால் உதவி கிடைக்கும், நாளாகவே இருக்கும். உத்தியோக முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மட்டும் கிடைக்கும். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஆதரவால் வீட்டுப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வீர்கள். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசும் சூழ்நிலை ஏற்படும். கவனமாக கொஞ்சம் இருங்கள்.
மனைவி குழந்தைகளின் உடல் நிலையில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். சிலருக்கு இடமாற்றம் போன்றவை ஏற்படலாம். வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருங்கள். வயிறு தொடர்பான நோய் வந்து நீங்கும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள்.
அதுமட்டுமில்லாமல் இன்று பொருட்களை கையாளும் பொழுது நிதானத்துடன் கையாளுங்கள். இன்று மாணவர்கள் கொஞ்சம் முயற்சியின் பேரில் தான் படிக்க வேண்டியிருக்கும். படித்ததை எழுதிப் பாருங்கள். அது மட்டுமில்லாமல் இன்று ஆசிரியர்கள் சொல்வதை புரிந்து கவனித்துக் கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், உங்களுக்கு அதிர்ஷ்டம் அதிக அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் இளம் மஞ்சள் நிறம்