இன்ஸ்டகிராம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்கும் வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய மக்களை மிகவும் அடிமைகளாகிய ஒரு செயலி டிக் டாக் தான். அதற்கு காரணம் அதில், தங்களது திறமைகளை பொதுமக்கள் காட்டும் போது அவர்கள் மிகப்பெரிய சினிமா பிரபலங்களாக இல்லாவிட்டாலும் கூட, டிக்டாக் செயலியில் வீடியோ வெளியிட்டதற்கு பின், பிரபலமாகி அதற்கான ஒரு போதையை கொடுத்தது விடுகிறது. தற்போது உலக நாடுகளில் டிக்டாக் செயலிக்கு எதிர்ப்புகள் கிளம்பி வரும் சூழ்நிலையில், இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவும் அந்த செயலியை தடை செய்ய திட்டமிட்டு உள்ளது.
இதை சாதகமாக பயன்படுத்தி டிக்டாக்கின் இடத்தை பிடிப்பதற்கு பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்ஸ்டாகிராம் செயலி ரீல்ஸ் என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வீடியோ பதிவர்களுக்கு பணம் அளிக்கப்படும் என அதிரடி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டவர்களை கவர்ந்திழுக்கும் வகையில், சிறந்த வீடியோக்களுக்கு மட்டும் பணம் வழங்கப் போவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் 1500 கோடி நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.