நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி , உலகக் கோப்பை போட்டிக்கு சமமானது என்று உமேஷ் யாதவ் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் வருகிற ஜூன் 2ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துடன் மோதுகின்றது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தப்போட்டி தொடரில் இடம் பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் பேட்டி ஒன்றில் கூறும்போது, நடக்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியானது, உலக கோப்பை போட்டிக்கு நிகரானது என்று ரஹானே மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் கூறியிருப்பது சரியானதாகும். அதை தான் நானும் கூறுகிறேன் . ஒரு வீரராக டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது, உலகக்கோப்பை போட்டி விளையாடுவதாக நினைத்து செயல்பட வேண்டும்.
அதேபோல் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் வீரர்கள் விளையாடுவதற்கு நல்ல சுதந்திரத்தையும், நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் நடந்து கொள்கின்றன. இவ்வாறு வீரர்களை சுதந்திரமாக செயல்பட வைத்தால் மட்டுமே, அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். இந்திய அணி கடந்த 5 வருடங்களாக ,சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சரியான பாதையில் பயணிக்கின்றது. அத்துடன் தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சும் நன்றாக அமைந்திருக்கிறது. இதனால் இங்கிலாந்து ஆடுகளத்தின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு பந்து வீச வேண்டும். இதனால் ஆடுகளத்தில் பொறுமையுடனும், கட்டுக்கோப்புடனும் செயல்பட வேண்டியது அவசியமாகும் என்று அவர் கூறினார்.