Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இந்த தப்பை பண்ணவே கூடாது… உரிமம் ரத்து செய்யப்படும்… மாவட்ட கலெக்டரின் எச்சரிக்கை…!!

மருத்துவர்களின் பெயரைச் சொல்லி சிகிச்சை அளித்தால் மருந்துக்கடைகளில் உரிமை ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியாளர் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் தனியார் மருந்தகங்களின் உரிமையாளர்கள் கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் சமீரன் தலைமையில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் நெடுமாறன், சுகாதார இயக்குனர் டாக்டர் அருணா, மருந்து ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட மருந்து கடை உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியாளர் சமீரன் என்பவர் மருந்து கடைகளில் மருந்து வாங்க வரும் பொதுமக்களிடம் மருத்துவர்களின் அனுமதி சீட்டு இல்லாமல் காய்ச்சல் மற்றும் சளி, இருமல், போன்ற நோய்களுக்கு மருந்து மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காய்ச்சல் மற்றும் சளி இருமல் போன்ற அறிகுறிகளுடன் மருந்து வாங்க வரும் பொதுமக்களை உடனடியாக சுகாதாரத் துறை அலுவலகங்களில்  தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மருந்து கடைகளுக்கு மருந்து வாங்க வரும் பொதுமக்கள் சிலருக்கு காய்ச்சல் அறிகுறி ஏதேனும் தென்பட்டால் அவர்களின் ஆக்சிஜன் அளவை அறிந்து கொள்ளும் வகையில் பல்ஸ் ஆக்சியோ கருவியை வைத்து இலவசமாக அவர்களுக்கு ஆக்சிஜன் அளவை பரிசோதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காய்ச்சல் மற்றும் சளி தொடர்பான மருந்துகளை பொதுமக்களிடம் வழங்கும் தகவலை சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு மருந்துக் கடை உரிமையாளர்கள் தினந்தோறும் தெரிவிக்க வேண்டும் என்றும் மருந்து கடைகளில் மருத்துவர்களின் பெயர்களைச் பயன்படுத்தி பொதுமக்களுக்கு யாருக்கேனும் சிகிச்சை அளிக்கப்படுவது தெரிந்தால் மருந்தகங்களின் உரிமையை உடனடியாக ரத்து செய்யப்படுவதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியாளர் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத் துறைக்கும்  மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தின் இறுதியில் ஐ.சி.ஐ.சி.ஐ.வங்கி அமைப்பின் மண்டல மேலாளர் சார்பில் ரூபாய் 5 .25 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகளை மாவட்ட ஆட்சியாளர் சமீரனிடம் வழங்கியுள்ளார்.

Categories

Tech |