இந்த வருடம் கல்லூரிகளில் மாணவர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியார் அரசு கல்லூரில் மாணவர் சேர்க்கை முடியும் நிலையில் இருக்கின்றது. இந்நிலையில் இந்த வருடம் பிளஸ்-2 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதால் ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேர்ந்து பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கின்றது.
இதனை அடுத்து அனைத்து கல்லூரிகளிலும் சுழற்சி முறையை அமல்படுத்தி அதிகமான மாணவர்களை சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி கார் நிறுத்தம் அருகாமையில் அனைத்துக்கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கியுள்ளார்.
அதன்பின் மாநிலச் செயலாளர் வக்கீல் சந்திரசேகரன், மாநில குழு உறுப்பினர் மாதவன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த், மக்கள் அதிகாரம் பாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குளோப், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.