Categories
தேசிய செய்திகள்

அட! என்னப்பா சொல்றீங்க…. இந்த விஷயத்தில் ஆண்களை விட பெண்களை அதிகம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

டெல்லியில் அரசின் மதுபான கொள்கை பற்றிய சர்ச்சை நீடித்து வருகிறது. இந்நிலையில் மது குடித்துவிட்டு வாகன ஓட்டுபவர்களுக்கு எதிரான பெயரில் செயல்பட்டு வரும் என்.ஜி.ஓ அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. அதில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, நாட்டில் கொரோனா பெருந்தொற்றில் ஏற்பட்ட ஊரடங்கு காலத்தில் டெல்லி பெண்களிடம் மதுபான நுகர்வு அதிகரித்துள்ளது என்று தெரியவந்துள்ளது. இது பற்றி 5,000 பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் கடந்த மூன்று ஆண்டுகளில் மதுபானம் குடிப்பது தங்களிடம் அதிகரித்துள்ளது என்று 37.6% பெண்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நிறைய சிலரை விலை கடைகள் ஒன்று வாங்கினால் ஒன்று இலவச என்ற சலுகை மற்றும் தள்ளுபடி ஆகியவை அதிக அளவில் மதுபானம் வாங்குவதற்கு காரணம் என்று 70% பெண்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனா பெரும் தொற்றுக்குப் பிறகு ஏற்பட்ட தனிமை, கவலை, தொழில்முறை பொறுப்புகள், மன உளைச்சல் ஆகியவற்றை மறக்க இந்த பழக்கம் அவர்களிடம் அதிகரித்து உள்ளது. இதில் மன அழுத்தத்தினால் பெண்களுக்கிடையே இந்த விகிதம் 45% அதிகரித்துள்ளது. அவர்களில் 7% பேர் தீங்கு தரும் அளவில் குடிக்க அடிமையானகி உள்ளனர். கொரோனாவுக்கு பிறகு ஆண்களை விட பெண்களிடையே அதிக அளவில் குடிக்கும் பழக்கம் அதிகரித்து உள்ளது என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |