இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பை ஆங்கிலேயர் மற்றும் முகலாயர்களால் உடைக்க முடியவில்லை என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
நொய்டாவில் உள்ள கௌதம புத்தா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தெய்வ இதய பூமியான இந்தியாவின் சகோதரத்துவத்தை கற்றுக் கொள்வதற்காக உலகமெங்கிலும் இருக்கும் மக்கள் வருகின்றனர் என்றார்.
இந்தியாவுக்கான விடுதலைப் போராட்டத்தின் போது ஊடகங்களை சுதந்திர போராட்டகாரர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டதாகக் கூறிய ஓம்பிர்லா வலுவான ஜனநாயகத்திற்கு ஊடகங்கள் தனி தன்மையுடனும், பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்றார்