உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலை இந்தியாவை பின்னுக்கு தள்ளி பிரேசில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டுமார்ச்மாதம் உலகம் முழுவதிலும் பரவத்தொடங்கியது. அதனால் ஏழை, பணக்கார, நாடுகள் என்ற வேறுபாடு இல்லாமல் உலக மக்கள் அனைவரையும் இந்த வைரஸ் தாக்கியது கடும் பாதிப்பை சந்தித்து வந்துள்ளனர் .அதன் பிறகு படிப்படியாக கொரொனாவைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தது.ஆனால் தற்போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கொரொனா வைரஸ் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கொரொனாபாதிப்பில் உலக அளவில் பிரேசில் நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.இந்தியாவைப் பொறுத்தவரையில் மகாராஷ்டிராமாநிலத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் குறைந்த பாடுயில்லை . மகாராஷ்டிர மாநிலத்தில்தினமும் 15 ,000 மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அதனைப்போலவே மும்பையிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதனையடுத்து இந்தியாவில் தினந்தொறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25 ,000 என்ற அளவிலும் , பிரேசிலில் 70,000 என்ற அளவிலும் உள்ளது .அங்கு தினமும் உயிரிழப்பு 2,000ஐ நெருங்குகிறது .இந்நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா 11 ,359 ,048 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனைப்போலவே இந்தியாவை காட்டிலும் பிரேசில் நாட்டில் கொரோனாபாதிப்பு 80,000 மாக அதிகரித்துள்ளது .அந்நாட்டில் கொரோனா வைரஸின் தொற்றால்11,439,250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.