Categories
உலக செய்திகள்

இந்தியரை அவமானப்படுத்திய வெளிநாட்டு இளைஞன்…கன்னம் பழுக்க கொடுத்த வீரத்தமிழன் …குவியும் பாராட்டுக்கள்…!!

இந்தியரை அசிங்கப்படுத்திய இளைஞரை கண்ணம் பழுக்கும் வண்ணம் அடித்த வீரத்தமிழருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் தோட்டவேலை செய்துவரும் இந்தியரை இந்தோனேசியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் அழைத்து மிரட்டியதுடன் அவரை அசிங்கப்படுத்தும் வகையில் அவரின் மீது எச்சில் துப்பியுள்ளார். அந்த வழியில் சென்ற தமிழகத்தை சேர்ந்த நபர் ஒருவர் இதைப்பார்த்து அந்த இளைஞனை அழைத்து அவனுடைய மொழிகளில் எதற்காக அவரை அடித்தாய் என்று கேட்டுள்ளார். பின்பு அந்த இளைஞனை கன்னம் பழுக்க அடித்துள்ளார். அதன்பின் அந்த இந்தியரிடம் சென்று நீங்கள் தமிழ் நாடா என்று கேட்டுள்ளார்.

உடனே அவர் நான் தமிழ்நாடு  இல்லை ஆந்திரா என்று கூறியுள்ளார். அவன் என்ன செய்தான் என்றபோது உரிமையாளரிடம் சொல்லி விடுவேன் என்றும், எச்சில் துப்பிய தாக கூறினார். உடனே ‘நாம் இந்தியர் இப்படி எல்லாம் விடாதீங்க, நம் உரிமையை விட்டு கொடுக்க கூடாது. தைரியமாக ஒன்று கொடுத்து விடுங்கள்’ என்று கூறினார். கண்முன்னால் என்ன நடந்தால் நமக்கென்ன என்று செல்லும் இக்காலத்தில் வெளிநாட்டில் தமிழன் தனி ஒருவராக அந்த நபரிடம் அறிவுரை கூறி அந்த இளைஞரை தண்டித்ததை, இணையவாசிகள் “வீரத் தமிழர் என்பதை நிரூபித்து விட்டார்” என புகழ்ந்து வருகின்றனர்.

 

Categories

Tech |