பாகிஸ்தான் இந்தியா மீது ஏவுகணையை ஏவ திட்டமிட்டுள்ளது.
அரியானா மாநிலம் சிர்சா பகுதியில் உள்ள படைத்தளத்தில் இருந்து இந்திய விமானப்படை போர் விமானம் கடந்த 9ஆம் தேதி வழக்கமான பயிற்சியின் போது அதிநவீன சூப்பர் சோனிக் ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டது. இந்த ஏவுகணை பாகிஸ்தான் நாட்டின் எல்லைக்குள் 125 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மியன் ஷனு என்ற பகுதியில் விழுந்தது. இந்த விபத்தினால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் இந்தியா பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் இந்தியா பாகிஸ்தானுக்குள் சூப்பர் சோனிக் ஏவுகணை தவறுதலாக விழுந்ததுக்கு வருத்தம் தெரிவித்திருந்த நிலையில் பாகிஸ்தான் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைக்கு பதிலடி கொடுக்க இந்தியா மீது பாகிஸ்தான் அதேபோன்ற ஏவுகணையை ஏவ திட்டமிட்டு தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து சர்வதேச பத்திரிக்கையாளர் நிறுவனமான புலூம்மெக்ர் இந்தியா சூப்பர் சோனிக் ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டது என்றதால் பாகிஸ்தான் இந்தியா மீது ஏவுகணை வீசும் திட்டத்தில் கைவிட்டதாக தெரிவித்துள்ளது.