Categories
உலக செய்திகள்

‘இது தான் எங்களின் முதல் முயற்சி’…. மூன்று நாடுகளின் கூட்டணி…. வெளியிடப்பட்ட அறிக்கை….!!

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் சேர்ந்து முத்தரப்பு கூட்டாண்மையை உருவாக்கியுள்ளனர்.

இந்தோ- பசிபிக் பகுதியில் புதிதாக சீர்திருத்தப்பட்ட பாதுகாப்பு கூட்டாண்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பசிபிக் பகுதியில் அமைதி மற்றும் நிலைத்த தன்மையை ஏற்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. இதற்காக ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் முத்தரப்பு பாதுகாப்பு கூட்டாண்மை குறித்து அறிக்கை ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதனை அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் சேர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டனர். இதன் மூலம் மூன்று நாடுகளுக்கு இடையேயான சந்திப்புகள், கடல் சார்ந்த திறன்கள், பெருகி வரும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றிற்கு தேவையான ஒத்துழைப்பு அளிக்கப்படும்.

மேலும் இது தொடர்பாக ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் தகவல் வெளியிட்டுள்ளார். அதில் “புதிய சீர்திருத்தப்பட்ட பாதுகாப்பு கூட்டாண்மை என்பது தொழில்நுட்பம் விஞ்ஞானிகள், தொழில் மற்றும் பாதுகாப்பு படை போன்றவை இணைந்து அமைதியான பகுதியை அளிப்பதற்கு தரும் பங்களிப்பாகும். அதிலும் இதன் முதல் முயற்சி அணுசக்தி வாயிலாக செயல்படும் நீர்மூழ்கி கப்பலை ஆஸ்திரேலியாவிற்கு அளிப்பதாகும். இதனை எட்டுவதற்கான சிறந்த வழிமுறைகளை விரைவில் தேர்ந்தெடுப்போம். குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உடன் இணைந்து ஆஸ்திரேலியாவில் நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |