இந்தியா-சீனா எல்லை பகுதியில் இமாசலப் பிரதேசத்தில் இருக்கும் நாட்டின் கடைசி கிராமம் கின்னெளர் மாவட்டம் சித்குல் கிராமம் ஆகும். இந்த கிராம மக்கள் தொடர்ந்து ஒரே கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். அதாவது, சித்குல் கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தோ-தீபெத் எல்லை காவல் படையை தும்தி கிராமத்துக்கு மாற்ற வேண்டும் என்பதை அவர்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது. இந்த கிராமத்துக்கு சித்குலில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இரண்டு காரணங்களுக்காக இவர்கள் இந்த கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். அது என்னவென்றால், இந்த பகுதியிலிருந்து இந்தோ-திபெத் எல்லை படையை மாற்றினால் தங்கள் கிராமத்தில் சுற்றுலாத்துறையை நன்கு வளர்த்துக் கொள்ளலாம் என்றும் தங்கள் கிராமத்தை சுற்றிலும் இருக்கும் திறந்த வெளிப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொள்ள ஏராளமான நிலப்பரப்பு கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.
அதனை தொடர்ந்து இந்த கிராமத்தில் 659 பேர் வசிக்கிறார்கள். இவர்களில் 415 பேர் வாக்காளர்கள். தங்கள் பகுதியில் இந்தோ-திபெத் இல்லை படையின் கடுமையாக கெடுபிடிகளால், சுற்றுலா பயணிகளின் வருகை மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை ஈடுபட முடியாமலும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியாமல் கிராம மக்கள் சிரமப்படுவதாக கூறப்படுகின்றனர். வெறும் கால்நடை மற்றும் சுற்றுலாவை மட்டும் நம்பி இருக்கும் இந்த கிராமத்தில் இருந்து எல்லையே படையை மாற்றினால் இரண்டுமே நன்கு வளர்ச்சியடையும் என்று கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும் அந்த கிராமத்தில் நிலச்சரிவுகள் அதிகம் நடக்கும் அபாயம் இருப்பதால் தான் சுற்றுலா பயணிகளுக்கு கெடுபிடி விதிப்பதாகவும், நிலச்சரிவினால் யாரும் சிக்கிக் கொண்டால் மீட்பதற்காகவே எல்லை காவல் படையினர் அங்கு பணியமர்த்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.