கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள செமெரு எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் இடம் தான் இதோனேசியா. இங்கு அடிக்கடி சுனாமி, நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்றவைகள் ஏற்படுகின்றன. இதற்கு காரணம் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் இந்தோனேசியா அமைந்துள்ளதுதான். மேலும் இங்கு 130 எரிமலைகள் எந்த நேரத்திலும் வெடிக்கும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் மக்கள் தொகை அதிகம் உள்ள ஜாவா மாகாணத்தில் சுமார் 3676 மீட்டர் உயரமுள்ள செமெரு எரிமலை தற்போது வெடிக்கத் தொடங்கி இருக்கிறது. இது 5.6 மீட்டர் உயரத்திற்கு கரும் சாம்பல் புகையை உமிழ்கிறது. எரிமலை வெடிக்க தொடங்கி இருப்பதால் அதை சுற்றியுள்ள கிராமங்களில் அதிக வெப்பமாக உள்ளது. மேலும் சாம்பல் காற்றில் கலந்து உள்ளதால் காற்றின் தரம் மோசமடைந்து சுவாசிப்பதற்கு கடினமாக இருக்கிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அதனை சுற்றி இருக்கும் கிராமங்களில் உள்ள மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என அங்கிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று 6.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இதில் சுமார் 56 பேர் உயிரிழந்த நிலையில் 826 பேர் படுகாயமடைந்துள்ளனர்.