இந்துக் கோவிலை இடிப்பதற்கு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டிலிருக்கும் இந்து மாகாணத்திலுள்ள கராய்ச்சியில் கடந்த 1932 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்து கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவில் அமைந்திருக்கும் இடத்தை சிந்து மாகாணத்தினுடைய அறக்கட்டளை சொத்து வாரியம், தனியாருக்கு குத்தகை விட்டது. இதனையடுத்து கோவில் இருக்கும் இடத்தை குத்தகைக்கு எடுத்த நபர் அதனை இடித்துவிட்டு அங்கு புதிய கட்டடத்தை கட்டுவதற்கு திட்டம் போட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தனியாரின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுபான்மையினரின் நலனுக்கான ஆணையம் சிந்து மாகாணத்திலிருக்கும் ஐகோர்ட்டில் இந்து கோவிலை எடுப்பது தொடர்பான வழக்கை தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், கடந்த 2014ஆம் ஆண்டு இந்து கோவிலை இடிப்பதற்கு அனுமதி அளித்தது. இந்த தீர்ப்பினால் அதிர்ச்சியடைந்த சிறுபான்மையினர் நலனுக்கான ஆணையம் பாகிஸ்தானிலிருக்கும் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில் சிறுபான்மையினர் நலனுக்காக ஆணையம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்துள்ளது. இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இந்து கோவிலை இடிப்பதற்கு தடை உத்தரவை பிறப்பித்ததோடு மட்டுமில்லாமல் அதனை பராமரிப்பதற்கும் உத்தரவிட்டுள்ளனர்.