Categories
உலக செய்திகள்

வழக்கு விசாரணை ஒத்திவைப்பு…. 50 பேர் கைது…. தகவல் வெளியிட்ட பாகிஸ்தான் போலீசார்….!!

கோவில் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் பாகிஸ்தான் போலீசார் 50 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் கிழக்கு பஞ்சாப்பில் உள்ள மதப் பள்ளியை அவமதித்த குற்றத்திற்காக 8 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி உள்ளான். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஹிம் யார்கான் மாவட்டத்திலுள்ள விநாயகர் கோயில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை அடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யாததற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இச்செயலால் உலகில் பாகிஸ்தானின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையை வருகின்ற 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

இதனிடையில் இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் தூதரை அழைத்து மத்திய அரசு சிறுபான்மையினர் மற்றும் மத வழிபாட்டு தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த வழக்கில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இது குறித்து ரஹிம் யார்கான் மாவட்டத்தைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் ஆசாத் சர்பாஸ் கூறியதில் “இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |