ஆபாச வீடியோவை பெற்றுக்கொண்டு பணம் கேட்டு மிரட்டியதாக வடமாநில பெண் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள வாலிபரிடம் வடமாநிலப் பெண் முகநூல் மூலம் நட்பு அழைப்பு விடுத்துள்ளார். இதனை அடுத்து அந்த வாலிபரும் நட்பு அழைப்பை ஏற்றுக்கொண்டு நீண்ட நாட்களாக இருவரும் முகநூல் பக்கத்தில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த வடமாநில பெண் வாலிபரின் வாட்ஸ்அப் எண்ணை அவரிடம் கேட்டுள்ளார். அதன்பின் வீடியோ காலில் இருவரும் அந்தரங்கமாக பேசியுள்ளனர். இதன் பிறகு அந்தப் பெண் வீடியோ காலில் நடந்ததை பதிவு செய்து வைத்து வாலிபரை மிரட்டி வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் வாலிபரிடம் 20 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் தன்னிடம் பணம் இல்லை என்று அந்தப் பெண்ணிடம் கூறிய போது அந்தப் பெண் வீடியோவை காண்பித்து வாலிபரை மீண்டும் மிரட்டியுள்ளார். அதன்பிறகு அந்தப் பெண் வாலிபரின் முகநூல் நண்பரானா 5 பேருக்கு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர் சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு சென்று வடமாநில பெண் மீது புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.