மேட்ரிமோனியில் அறிமுகமான பெண்ணால் இளைஞருக்கு நேர்ந்த சிக்கல் அவரை காவல் துறையில் புகார் அளிக்க வைத்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் அம்பித் குமார் மிஸ்ரா என்ற இளைஞர். இவர் தனது திருமணத்திற்காக பெண் தேடி பிரபல மேட்ரிமோனி ஒன்றில் பதிவு செய்திருந்தார். இதன் மூலம் ஸ்ரேயா என்ற ஒரு பெண் குமாருக்கு அறிமுகமானார். அதன்பின் இருவரும் திருமணம் செய்து ஒப்புக்கொண்டதால் தொலைபேசி வழியாக போன் செய்தும், வீடியோ கால் செய்தும் தங்கள் எதிர்கால வாழ்க்கை குறித்து பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி இருவரும் தங்களது வீடுகளில் தனிமையில் வீடியோக்கால் செய்து பேசியுள்ளனர். அப்போது ஸ்ரேயா தனது ஆடைகளை கழற்றி விட்டு குமாரையும் அவரது ஆடைகளை கழட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளார். வருங்கால மனைவி தானே சொல்கிறார் என்று குமாரும் தனது ஆடைகளை கழட்டினார்.
இதில்தான் குமாருக்கு ஒரு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது. ஏனென்றால் ஸ்ரேயா குறிப்பிட்ட காட்சிகளை மட்டும் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்று கூறி குமாரை மிரட்டியுள்ளார். அப்படி செய்யக்கூடாது என்றால் தனக்கு 1 லட்சம் ரூபாய் கொடுத்தால் அந்த வீடியோவை அழித்து விடுவேன் என்றும் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியில் மூழ்கிய குமார் ஸ்வேதாவின் மிரட்டலுக்கு பயந்து முதலில் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் ஸ்ரேயா தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் என்னது செய்வதென்று தெரியாது நின்ற குமார் போலீசாரிடம் புகார் அளித்தார். குமார் இதுவரை ஸ்ரேயாவை நேரில் சந்திக்காததால் இந்த வழக்கு இணையவழி குற்றமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.