Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“போதையில் பெண்ணிடம் சில்மிஷம்” செய்த காவலர்… புரட்டி எடுத்த மக்கள்… வைரலாகும் வீடியோ..!!

போதையில் தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் காவலர் ஒருவர் தவறாக நடக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`சென்னை, எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் ராஜு. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பணி முடிந்து, வீட்டுக்கு செல்லும்போது பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். வடபழனி பேருந்து நிலையம் அருகே பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் அந்த பெண்ணிடம் சென்று ஆபாசமாக பேசியுள்ளார்.

இருப்பினும் அந்த பெண் எதுவும் பேசாமல் ஒதுங்கி நின்றுள்ளார். உடனே அப்பெண் கூச்சலிட்டு கத்தியுள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு காவலரை சரமாரியாக அடித்துள்ளனர். அப்போதுதான் அவர் நல்ல குடி போதையில் இருந்த தெரியவந்தது. இதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சி வைரலாகி வருகிறது.

மேலும் காவல்துறை மீது சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ராஜி மீது நடவடிக்கை எடுக்க வடபழனி காவல் நிலைய போலீசாருக்கு சென்னை காவல் துறை உத்தரவிட்டது. தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டார். மேலும் இவரை சஸ்பெண்ட் செய்ய காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

https://youtu.be/PVgVVoYKYBM

Categories

Tech |