Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய(01.08.2020)நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

01-08-2020, ஆடி 17, சனிக்கிழமை.

இராகு காலம் – காலை 09.00-10.30

எம கண்டம் மதியம் 01.30-03.00

குளிகன் காலை 06.00-07.30.

இன்றைய ராசிப்பலன் –  01.08.2020.

மேஷம்

வண்டி வாகனங்களால் செலவுகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் வருமானம் ஓரளவு சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்

வீண் பிரச்சினைகள் உங்களைத் தேடி வரும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் பேசும்போது கவனமுடன் பேச வேண்டும். எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மிதுனம்

பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் குறையும். அதிகாலையிலேயே நற்செய்திகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சகோதர சகோதரிகளின் உதவியும், ஒத்துழைப்பும் கிடைக்கும்.

கடகம்

உங்கள் திறமையை வெளிப்படுத்தும் நாளாக இன்று அமையும். புதிய பொருட்களின் சேர்க்கை உண்டு. புதுப் பொலிவுடனும் உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

சிம்மம்

எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட காலதாமதமாக தான் முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்திற்கான செலவுகள் செய்ய நேரிடலாம். ஆரோக்கியம் தொடர்பாக பலவீனம் இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கன்னி

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று காலதாமதம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ செலவுகள் உண்டாகலாம். பழைய கடன்கள் வசூலாகும். தொழில் வியாபாரத்தில் அனுகூல பலன் அடைய நண்பர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும்.

துலாம்

ஆடை ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பயணங்களால் அனுகூலம் உண்டு. இன்று உங்களுக்கு பண வரவு அமோகமாக இருக்கும். எடுக்கும் காரியங்களில் தடையின்றி செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

விருச்சிகம்

தொழில் தொடர்பான புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூல பலன் கிடைக்கும். பொருட்கள் வாங்குவது எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும்.

தனுசு

இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். நினைத்த காரியத்தை நினைத்த படி செய்து முடிக்கும் நாளாக இன்று அமையும். உற்றார் உறவினர்கள் உதவியுடன் பொருளாதார பிரச்சனைகளை சமாளிக்க முடியும். நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலன் உண்டு.

மகரம்

சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறையும். புதிய வண்டி வாங்கும் யோகம் உண்டாகும்.

கும்பம்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வங்கி கடன் பெறுவதற்கான முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். திருமண பேச்சுவார்த்தைகளில் அனுகூல பலன் உண்டு.

மீனம்

பிள்ளைகளால் மன மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். பழைய கடன்கள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

Categories

Tech |