03-05-2020, சித்திரை 20, ஞாயிற்றுக்கிழமை
இராகு காலம் – மாலை 04.30 – 06.00
எம கண்டம் – பகல் 12.00 – 01.30
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30
இன்றைய ராசிப்பலன் – 03.05.2020
மேஷம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சுமாராகத்தான் இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். வியாபாரத்தில் மந்தமான நிலையே காணப்படும். பெரிய மனிதர்களின் ஆதரவும் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நல்லது.
ரிஷபம்
இன்று தேவையற்ற மன குழப்பம் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கை கொடுக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வேலையாட்களை அனுசரித்துச் செல்வது சிறப்பு.
மிதுனம்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் படிப்பில் அதிகாரத்துடன் செயல்படுவார்கள். நவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.. சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
கடகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் எதையும் சமாளிக்கும் திறன் ஏற்படும். நல்ல நட்புகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். வேலையில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும்.
சிம்மம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் உங்களது முயற்சிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கன்னி
குடும்பத்தில் இன்று திடீர் தனவரவு உண்டாகும். நவீன பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் குறைந்து நன்மைகள் உண்டாகும்.
துலாம்
சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பெரியோர்களால் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலை உண்டாகும், நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும். இருக்கும் இடத்தில் உங்கள் புகழ் மேலோங்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. நண்பர்கள் தேவையறிந்து உதவி செய்வார்கள்.
தனுசு
இன்று உறவினர்கள் வழியில் நற்செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். சேமிப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் உண்டு. தொழிலில் ஒரு சில மாற்றங்கள் செய்தால் சிக்கலை எதிர் கொள்ள முடியும்.
மகரம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக் கவலைகள் உண்டாகலாம். உங்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகமில்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.
கும்பம்
இன்று குடும்பத்தில் பண வரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகளின் தேவையில்லாத பிரச்சினைகள் வரலாம். நண்பர்களின் உதவியால் வியாபாரத்திலிருந்த சிக்கல்கள் தீரும். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மீனம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் நற்செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.