03-06-2020, வைகாசி 21, புதன்கிழமை.
இராகு காலம் மதியம் 12.00-1.30
எம கண்டம் காலை 07.30-09.00
குளிகன் பகல் 10.30 – 12.00.
இன்றைய ராசிப்பலன் – 03.06.2020
மேஷம்
இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டு. உத்தியோகம் தொடர்பாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். தொழில் தொடர்பாக ஏற்பட்ட புதிய மாற்றங்களால் லாபம் அதிகரிக்கும்.
ரிஷபம்
பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறலாம். குடும்பத்தில் சுப காரியங்கள் சிறப்பாக நடைபெறும். தொழில் தொடர்பாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். வெளியூர் நபர்கள் மூலம் நற்செய்திகள் கிடைக்கும்.
மிதுனம்
உடல் நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் காணப்படும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த லாபம் தடைபடாமல் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
கடகம்
நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலம் அற்ற பலன் உண்டாகும். தெய்வ வழிபாடு நல்லது. வியாபாரத்தில் நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெற்று எதையும் சமாளிப்பீர்கள்.
சிம்மம்
இன்று உத்தியோகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். வியாபார முன்னேற்றத்திற்காக எதிர்பார்த்த கடன் உதவி எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுபச் செய்திகள் உண்டு.
கன்னி
இன்று பணவரவு சுமாராக இருக்கும். வேளையில் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்கள் விரயச் செலவுகள் உண்டாகலாம். பூர்வீக சொத்துகளால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
துலாம்
உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் அனுபவம் உள்ள பெரியவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் மூலம் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் காணப்படும்.
விருச்சிகம்
சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். மன உறுதியோடு பிரச்சனைகளை எதிர் கொள்வீர்கள். செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடலாம்.
தனுசு
குடும்பத்தில் மங்கல நிகழ்வுகள் ஏற்படும். பல புதிய மாற்றத்தால் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய நட்பு உண்டாகும். தனவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.
மகரம்
குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் அதிகரிக்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். திருமணப் பேச்சுவார்த்தையில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை மேலோங்கும்.
கும்பம்
நண்பர்களுடன் பேச்சுவார்த்தைகளால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். பெரியவர்களுடன் வாக்குவாதம் உண்டாகும். வியாபாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் சற்று பொறுமையாக செயல்படுவது நல்லது.
மீனம்
உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகரிக்கும். வேலையில் நிதானம் தேவை. குடும்பத்தாரின் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். செய்யும் செயலில் காலதாமதம் ஏற்படும். தொழில் தொடர்பாக புதிய முயற்சிகள் ஏதும் செய்யாமல் இருப்பது நல்லது.