09-05-2020, சித்திரை 26, சனிக்கிழமை.
இராகு காலம் – காலை 09.00-10.30
எம கண்டம் மதியம் 01.30-03.00
குளிகன் காலை 06.00-07.30.
இன்றைய ராசிப்பலன் – 09.05.2020
மேஷம்
இன்று உங்களுக்கு மன உலைச்சல் ஏற்படலாம். மற்றவர்கள் மீது கோபப்படும் நிலை உருவாகும். பெரிய முதலீடுகளை செய்யாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் நற்செய்திகள் வந்து சேரும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும்.
மிதுனம்
குடும்பத்தின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்கள் மூலம் நற்செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். சுபச் செலவுகள் உண்டாகலாம். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்
கடகம்
எதிர்பாராத வகையில் திடீர் செலவுகள் உண்டாகலாம். வியாபாரத்தில் கவனமாக இருப்பது நல்லது. உடன் பிறந்தவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலிப்பதில் சில இடையூறுகள் ஏற்படும். வியாபாரத்தில் கவனமாக இருப்பது நல்லது. தொழில் தொடர்பாக தேவையற்ற மனக்குழப்பம் உண்டாகும்.
சிம்மம்
இன்று குடும்பத்தின் பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வேலைச்சுமை குறையும். மற்றவர்களுக்கு உதவும் வகையில் பணம் தாராளமாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக அதிக கவனம் செலுத்துவீர்கள்.
கன்னி
எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். அனைத்து வகையிலும் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் சக ஊழியர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.
துலாம்
தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தெய்வ வழிபாடு நன்மையை கொடுக்கும். எந்த செயலையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதியற்ற சூழ்நிலை உண்டாகும்.
விருச்சிகம்
வீட்டின் இன்று மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உடல் உபாதைகள் நீங்கி குடும்பத்தில் நிம்மதி பெருகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்கள் சேரும். உறவினர்கள் வருகையால் ஆனந்தம் அதிகரிக்கும்.
தனுசு
உங்கள் உடல்நிலையில் சோர்வும் மந்தமும் உண்டாகலாம். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் இன்றி செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவும்,ஒத்துழைப்பும் மன நிம்மதியை கொடுக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம்.
மகரம்
குடும்பத்தில் செலவுகள் குறையும். சுபகாரிய முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ள நெருக்கடிகள் விலகி மன நிம்மதி கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
கும்பம்
இன்று புது உற்சாகத்துடன் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமணம் சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்களைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மீனம்
இன்று உடல்நிலையையில் ஒருசில உபாதைகள் வந்து நீங்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. வீட்டில் பிள்ளைகளால் சங்கடங்கள் உண்டாகலாம். அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது