Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய(09.06.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

09-06-2020, வைகாசி 27, செவ்வாய்க்கிழமை.

இராகு காலம் மதியம் 03.00-04.30

எம கண்டம் காலை 09.00-10.30

குளிகன் மதியம் 12.00-1.30.

இன்றைய ராசிப்பலன் –  09.06.2020

மேஷம்

நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு  மன மகிழ்ச்சியை கொடுக்கும். பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறைந்து ஒற்றுமை கூடும்.

ரிஷபம்

இன்று உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும்.  தொழிலில் வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டு. எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது.

மிதுனம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

கடகம்

இன்று குடும்பத்தில் பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும். பயணங்களால் அனுகூலம் உண்டு.

சிம்மம்

இன்று மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வழியில் அனுகூலம் உண்டு. வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.

கன்னி

இன்று  பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சற்று மந்த நிலை காணப்படும். உறவினர்களின் உதவியால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். வேலைச்சுமை குறையும். தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகளில் நண்பர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும்.

துலாம்

எதிர்பார்த்த உதவிகள் இன்று  கிடைக்கும். மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் செலவுகள் உண்டாகலாம். நிதானத்தை கடை பிடிப்பதன் மூலம் செலவுகளை தவிர்க்கலாம்.

விருச்சிகம்

நண்பர்கள் மூலம் இன்று சுப செய்திகள் வந்து சேரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். புதிய பொருட்கள் சேர்க்கை மகிழ்ச்சி கொடுக்கும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டு. சொத்து சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் அனுகூலமான பலன் உண்டாகும்.

தனுசு

உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். கடன்கள் ஒரளவு குறையும். தொழில் வியாபாரத்தில் பணியாட்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம்.  சிலருக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும்.

மகரம்

தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சேமிப்பு உயரும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமையும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

கும்பம்

உற்றார் உறவினர்களுடன் பேசும் போது நிதானத்தை கடைப்பிடிப்பது ரொம்ப நல்லது. வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். உத்தியோகத்தில் தேவையற்ற பிரச்சினைகள் தேடி வரும். வேலையாட்கள் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் அனுகூலமான பலன் உண்டு.

மீனம்

குடும்பத்தில் இன்று  மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சியில் வெற்றியை கொடுக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் எடுக்கும் காரியம் எளிதில் முடியும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

Categories

Tech |