13-05-2020, சித்திரை 30, புதன்கிழமை.
இராகு காலம் மதியம் 12.00-1.30
எம கண்டம் காலை 07.30-09.00
குளிகன் பகல் 10.30 – 12.00.
இன்றைய ராசிப்பலன் – 13.05.2020
மேஷம்
இன்று எந்த ஒரு கடினமான காரியத்தையும் எளிதில் முடித்து வெற்றி அடைவீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக மனம் மகிழும் நற்செய்திகள் வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் நன்மை நடக்கும்.
ரிஷபம்
பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். உத்தியோகத்தில் தேவையற்ற அலைச்சல் உண்டாகும். கடன் தொல்லை குறைந்து மன நிம்மதி ஏற்படும். பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை செய்தால் நற்பலனை அடையலாம்.
மிதுனம்
நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படலாம். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் வார்த்தைக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை. அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது.
கடகம்
இன்று உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டு. வேலையில் சகஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் சாதகமான நிலை உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
சிம்மம்
நீங்கள் இன்று புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பாக நற்பலன்கள் கிட்டும். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பால் சிக்கல்கள் குறையும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டு.
கன்னி
இன்று உங்கள் திறமைகள் வெளிபடும் நாளாக இருக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவிக்கு இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். செலவுகள் குறையும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும்.
துலாம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் பொருளாதார பிரச்சினைகள் குறையும். மன அமைதி உண்டாகும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பிர்கள்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உண்டாகலாம். உறவினர்கள் உதவியால் இதுவரை இருந்த பிரச்சினைகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.
தனுசு
குடும்பத்தில் சுப செலவுகள் நேரிடும். பெற்றோரிடமிருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை குறையும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள்.
மகரம்
உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உண்டு. தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டு. புதிய பொருட் சேர்க்கை ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவிகள் வந்து சேரும்.
கும்பம்
இன்று உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினை தீரும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் குறைந்து காணப்படும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நண்பர்களால் நன்மை உண்டு.
மீனம்
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் மூலம் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பாக புதிய முயற்சிக்கு அனுகூலம் உண்டு. நவீன பொருட்கள் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும்.