17-06-2020, ஆனி 03, புதன்கிழமை.
இராகு காலம் மதியம் 12.00-1.30
எம கண்டம் காலை 07.30-09.00
குளிகன் பகல் 10.30 – 12.00.
இன்றைய ராசிப்பலன் – 17.06.2020
மேஷம்
எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பொன், பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை குறையும். வம்பு வழக்கு போன்ற விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.
ரிஷபம்
தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் சாதகமான பலன் உண்டு. உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.. குடும்பத்தில் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும் தெய்வ வழிபாடு நல்லது. பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் சாதகமான பலன் உண்டு.
மிதுனம்
பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவீர்கள். செயலில் புது உற்சாகம் காணப்படும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
கடகம்
காலையிலேயே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். உங்கள் பிரச்சனைகள் தீர உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்திலிருந்த கடன் தொல்லைகள் நீங்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
சிம்மம்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் உண்டாகலாம். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும்.
கன்னி
உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடைகள் உண்டாகலாம். வியாபாரம் தொடர்பாக கொடுக்கல் வாங்கலில் நிதானமாகச் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் தோன்றி மறையும். பணியில் கவனம் தேவை.
துலாம்
குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை எதிர்பாராத வகையில் கிடைக்கும். புத்திரர்கள் வளியில் மன மகிழ்ச்சி உண்டாகும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை பலப்படும்.
விருச்சிகம்
பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணத்தால் வெளிவட்டார நட்பு உண்டாகும். உடல் நிலை சீராகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். சுப காரியங்கள் கைகூடும்.
தனுசு
குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேலைச்சுமை அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.
மகரம்
குடும்ப உறவுகளிடம் ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கும்பம்
பெண்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் சந்தோஷம் கூடும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் தொடர்பாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
மீனம்
தொழில்லில் தொடர்பாக வெளியூர் பயணங்களால் அலைச்சல்,.உடல்நிலை சோர்ந்து காணப்படும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தாரும் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.