23-05-2020, வைகாசி 10, சனிக்கிழமை.
இராகு காலம் – காலை 09.00-10.30
எம கண்டம் மதியம் 01.30-03.00
குளிகன் காலை 06.00-07.30.
இன்றைய ராசிப்பலன் – 23.05.2020
மேஷம்
இன்று உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம். தடை தாமதங்கள் ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாகவே இருக்கும். செய்யும் செயல்களில் கவனம் தேவை. திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.
ரிஷபம்
நற்பலன்களை கொடுக்கும் நீங்கள் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை கூடும். பணம் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய முயற்சிகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள்.
மிதுனம்
தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளால் அனுகூலம் கிடைக்கும்.
கடகம்
இன்று உற்றார் உறவினர்கள் மூலம் சுபச் செய்திகள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
சிம்மம்
இன்று பிள்ளைகள் மூலம் சுபச் செய்திகள் வந்து சேரும். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் பலன் கிடைக்கும். தடைகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
கன்னி
இன்று உடல் ஆரோக்கியம் ஒரு சில பாதிப்புகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். சிக்கனமாக நடந்து கொள்வதன் மூலம் பிரச்சனைகளை தீர்க்கலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்புகள் கரையும்.
துலாம்
இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் உண்டாகலாம். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பதே நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் மன மகிழ்ச்சி உண்டாகும். நவீனகரமான பொருட்களை வாங்கும் எண்ணம் நிறைவேறும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பாக பெரிய மனிதர்களை சந்திக்க நேரிடலாம். உபயோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும்.
தனுசு
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களால் அணுகுண்டு வியாபாரத்தில் மந்தநிலை நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.
மகரம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
கும்பம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நண்பர்களின் ஆதரவு ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் தேவையற்ற பிரச்சனைகள் மன உளைச்சல் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் பெரிய கெடுதல் இருக்காது.
மீனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். பொருளாதார பிரச்சினை விலகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உபயோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறையும். தொழில் தொடர்பாக புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன் கிடைக்கும்.