30-05-2020, வைகாசி 17, சனிக்கிழமை.
இராகு காலம் – காலை 09.00-10.30
எம கண்டம் மதியம் 01.30-03.00
குளிகன் காலை 06.00-07.30
இன்றைய ராசிப்பலன் – 30.05.2020
மேஷம்
பிள்ளைகளால் மன உளைச்சல் உண்டாகலாம். அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். கடன்கள் குறையும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
ரிஷபம்
குடும்பத்தில் உள்ளவர்களின் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை காணப்படும். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.
மிதுனம்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்தில் நண்பர்களுடன் ஒற்றுமையாக செயல்படுவதன் மூலம் லாபம் அதிகரிக்கும். மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
கடகம்
உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகலாம். உறவினர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.
சிம்மம்
எதிர்பாராத பண வரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில் தொடர்பாக வெளிவட்டார நட்பு உண்டாகலாம். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும், நற்செய்திகள் வந்து சேரும். புதிய முயற்சிகள் ஈடுபடுவதில் ஆர்வம் அதிகரிக்கும்.
கன்னி
இன்று மனநிம்மதி சற்று குறைந்து காணப்படலாம். உத்தியோகத்தில் தங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வீண் செலவுகள் நேரிடும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
துலாம்
இன்று உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் வந்துசேரும். குடும்பத்தில் பிள்ளைகள் பாசமுடன் செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும்.
விருச்சிகம்
இன்று தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். செலவுகள் குறையும். உறவினர்கள் வழியில் அனுகூல பலன் உண்டு. சிலருக்கு உபயோகம் தொடர்பாக இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். வீட்டில் பெண்கள் தம் பொறுப்பினை அறிந்து நடந்து கொள்வார்கள்.
தனுசு
குடும்பத்தில் வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறைவு ஏற்படும். வேலையில் ஏற்படும் பணிச்சுமை சக ஊழியர்கள் பகிர்ந்துகொள்வார்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் பிரச்சனைகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடலாம்.
மகரம்
உங்கள் உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். வியாபாரத்தில் பணம் தொடர்பாக கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை.
கும்பம்
எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.
மீனம்
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பழைய கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை கொடுக்கும். பிள்ளைகள் வழியில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். வேளையில் புதிய நபர் அறிமுக கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலனை கொடுக்கும்.