Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய(11.07.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

11-07-2020, ஆனி 27, சனிக்கிழமை.

இராகு காலம் – காலை 09.00-10.30

எம கண்டம் மதியம் 01.30-03.00

குளிகன் காலை 06.00-07.30.

இன்றைய ராசிப்பலன் –  11.07.2020.

மேஷம்

குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகலாம். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். பணவரவு சுமாராக இருக்கும். பெற்றோரின் ஆதரவு நம்பிக்கையை கொடுக்கும்.

ரிஷபம்

பெரிய மனிதர்களின் ஆதரவு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சுப முயற்சிகளில் அனுகூலம் உண்டு. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் நீங்கும்.

மிதுனம்

பிள்ளைகளால் சுபச் செலவுகள் உண்டாகும். கொடுத்த கடன்கள் வசூலாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டு. நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும்.

கடகம்

தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் ஏற்படலாம். சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில்  இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.

சிம்மம்

சுப முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சிலும், செயலிலும் நிதானம் தேவை. எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டும். தொழிலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.

கன்னி

உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். புதிய பொருள் சேர்க்கை உண்டு. உறவினர் வழியாக செய்திகள் கிடைக்கும்.

துலாம்

அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் கௌரவப் பதவிகள் கிடைக்கும். இல்லத்தில் சுப காரியங்கள் கைகூடும். எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். தொழிலில் இதுவரை எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு.

விருச்சிகம்

பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதற்கேற்ப நற்பலன் கிடைக்கும். குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறையும். பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். சிக்கனமாக செயல்பட்டால் பண பிரச்சனையை தவிர்க்கலாம்.

தனுசு

குடும்பத்தில் ஆடம்பர பொருட்களால் செலவுகள் அதிகரிக்கும். தெய்வ வழிபாடு நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களுடன் மனக் கசப்புகள் ஏற்படலாம். வியாபாரத்தில் இடையூறுகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மகரம்

பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்

வியாபாரத்தில் வீண் பிரச்சனைகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். மனதில் குழப்பங்கள் தேவையற்ற கவலைகள் உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

மீனம்

தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்க முயற்சிகள் அனுகூலமான பலனை கொடுக்கும். பழைய கடன்கள் நீங்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாகும். தாராள பணவரவு ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

 

Categories

Tech |